தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக உள்ளவர்களுக்கு கார் வசதி செய்து தர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு வாகன வசதி தேவைப்படுவதாக விசிக எம்எல்ஏ ஜோதிமணி சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்வானவர்களுக்கு விரைவில் கார் வசதியுடன், உதவியாளரையும் நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சட்டமன்றத்தில் சுமார் 70 சதவீதம் பேர் முதன்முறையாக எம்எல்ஏக்களாக உள்ள நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அவர்களின் தொகுதிப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




