Oplus_131072
முருங்கை கீரை சூப் செய்வது எப்படி….
தேவையான பொருட்கள்
முருங்கை இலை – 1 கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 6
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 2
தக்காளி – 1
தண்ணீர் – தேவைக்கேற்ப
உப்பு, மிளகு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.இஞ்சியை துருவிக் கொள்ளவும்.பூண்டை நசுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி, போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு முருங்கை இலைகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்.
கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.இப்போது சத்து நிறைந்த முருங்கை கீரை சூப் தயார்.




