அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வுபெற்ற தலைவர் சந்திரசேகர் தலைமையிலான நிபுணர் குழுவினர் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது அணையின் கட்டுமானம், நீர் வெளியேற்ற மதகுகள், 16 கண் உபரிநீர் போக்கி பாலம், மண் கரை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், அணையில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கருவிகள் மற்றும் நீர்மட்டத்தை கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாடுகளும் நிபுணர் குழுவினரால் சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படும் முழுமையான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.




