மாலை நேர சிற்றுண்டியாகவும், பண்டிகை காலங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பாரம்பரிய தின்பண்டமாகவும் காராச்சேவை தனி இடத்தைப் பிடித்துள்ளது. கடைகளில் வாங்குவதை விட, வீட்டிலேயே சுத்தமாகவும் சுவையாகவும் எளிதில் செய்து சாப்பிடலாம்.
கடலை மாவு, அரிசி மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள் உள்ளிட்ட பொருட்களை சரியான அளவில் கலந்து மென்மையாக பிசைந்து, காராச்சேவு அச்சில் பிழிந்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்தால், மொறுமொறுப்பான சுவையான காராச்சேவை தயார்.
குறைந்த செலவில், சுகாதாரமான முறையில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்த காராச்சேவை, மாலை நேர டீ அல்லது காபியுடன் சாப்பிட மிகவும் சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். ஒருமுறை செய்து பார்த்தால், மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்.




