தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற வணிக வளாகத் திறப்பு விழாவில் நடிகை ஸ்ரீலீலா பங்கேற்றார்.
அப்போது அவரை ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் சூழ்ந்தனர். இதில் சிறுமி ஒருவர் அன்புடன் ஸ்ரீலீலாவின் கன்னத்தில் முத்தமிட்டு, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களுடன் எளிமையாகவும் அன்பாகவும் பழகிய ஸ்ரீலீலாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.




