“50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததும் அரசியல் இயக்கமாக மாறுவோம்!” – அண்ணாமலை!

 

 

சென்னையில் இன்று (ஆக.16) ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் பலர் பங்கேற்றனர்.

 

பேரணியில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான அமைப்பாக ‘வி தி லீடர்ஸ்’ இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்” என்றார்.

 

மேலும், கடந்த 73 நாட்களில் 20 லட்சம் பேர் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும், 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த பிறகு அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read Previous

ரசிகை கொடுத்த முத்தம்! ஸ்ரீலீலாவின் எளிமை வைரல்!

Read Next

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular