இந்திய ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 3,996 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்த 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் வரும் செப்டம்பர் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு Level-6 அடிப்படையில் ஆரம்ப மாத ஊதியம் ₹35,400 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தங்களது கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.




