தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வரும் செப்டம்பர் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெற்றோர்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாயின் PICME எண், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டம் அரசு மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக செயல்படுத்தப்பட உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் மருத்துவமனை நிர்வாகம் ஆவணங்களை சரிபார்த்து, தகுதியான குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரத்தை நேரடியாக வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




