“ரீல் விடுவதிலேயே காலம் தாழ்த்துகிறது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

 

 

தவெக அரசு செயல்படாமல் வெறும் ரீல்ஸ் விடுவதிலும், அறிவிப்புகளை வெளியிடுவதிலுமே காலம் தாழ்த்தி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

 

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், விவசாயிகள் மீது தவெக அரசுக்கு அக்கறை இல்லை என குற்றம்சாட்டினார். தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறிய நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்றும் அவர் சாடினார்.

 

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியே அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் நலனுக்கு எதிரான அரசாக தவெக செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

Read Previous

சபாநாயகர் தேநீர் விருந்து விவகாரம்: கனிமொழி விளக்கம்!

Read Next

முன்னாள் தேசிய கால்பந்து வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular