கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற RSS இளைஞர் மாநாட்டில் பேசிய கேரள பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனன் குன்னும்மல், வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள் தங்களுடைய தாய் யார் என்றே தெரியாதவர்கள் எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாரத மாதாவை தாயாக மதிக்கும் கலாச்சாரம் கொண்ட இந்தியாவில், வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் தாயின் மகிமையை அறியாதவர்கள் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
துணைவேந்தரின் இந்தக் கருத்துக்கு கேரளாவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.




