நடிகரும் இயக்குநருமான ரவி மரியா, அதிமுகவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஜூலை மாதம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக பாராட்டியுள்ள ரவி மரியா, எதிர்காலத்தில் விஜய் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தீவிர எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆதரவாளராக அறியப்படும் ரவி மரியாவுக்கு, தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.




