கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் அருகே தண்டவாளத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். கவிதா (45), யசோதா (24) ஆகியோர் தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக ரயில் வந்த நிலையில், இருவரும் ரயில் வருவதை கவனிக்காமல் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. ரயில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




