விழுப்புரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் அருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




