பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆடி வெள்ளி விழாவையொட்டி கோயில் தேர் இழுக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தேர் இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அண்ணாதுரை, பரமசிவம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் விழாவில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




