தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கெட்டியான தயிர், உப்பு, கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி வேகவைக்கவும். தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்த மசாலாவை வேகவைத்த வெள்ளரிக்காயுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பின்னர் அடுப்பை அணைத்து, கெட்டியான தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும். கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து பச்சடியில் சேர்க்கவும்.
சுவையான வெள்ளரிக்காய் தயிர் பச்சடி தயார்!
சாதம், பிரிஞ்சி சாதம், தக்காளி சாதம் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.




