விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

 

 

விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

சிந்தாமணியைச் சேர்ந்த நண்பர்களான நரேஷ் (22), அருண்குமார் (23) ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னை – திருச்சி நோக்கி இரும்பு பிளேட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி மோதியதாக கூறப்படுகிறது.

 

இந்த விபத்தில் நரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அருண்குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி – எளிய செய்முறை!

Read Next

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தந்தை கத்தியால் குத்திக்கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular