ஹானூர் துப்பாக்கிச்சூடு: 3 தமிழர்கள் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்!

 

 

கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், கர்நாடக அரசிடம் உரிய முறையில் பேசி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read Previous

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு; பதிலடியாக 600+ டிரோன்கள்!

Read Next

“14 வயதிலேயே சினிமா வாய்ப்பு வந்தது!” – நடிகை சோனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular