மத்திய அரசின் வருமான வரித்துறையில் (Income Tax Department) 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான Canteen Attendant பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 காலியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹18,000 முதல் ₹56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 11.08.2026 முதல் 31.08.2026 வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | Income Tax Department |
| அறிவிப்பு எண் | Pr.CCIT/ MP/ CS/ Canteen Recruitment/ 2026-27 |
| வேலை வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Canteen Attendant |
| காலியிடங்கள் | 07 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| கல்வித் தகுதி | 10ஆம் வகுப்பு தேர்ச்சி |
| சம்பளம் | ₹18,000 – ₹56,900 |
| வயது வரம்பு | 18 – 25 வயது |
| விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
| விண்ணப்ப தொடக்கம் | 11.08.2026 |
| கடைசி தேதி | 31.08.2026 |
வயது தளர்வு
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை
- Short Listing
- Written Test
- Skill Test
- Document Verification
எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் அதிகாரப்பூர்வ Canteen Attendant Recruitment 2026 Portal-க்கு சென்று “Download Notification” என்பதைத் தேர்வு செய்து முழு அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள் “Register Here” என்பதை கிளிக் செய்து Registration செய்ய வேண்டும். பின்னர் Login செய்து Application Form-ஐ பூர்த்தி செய்து, கேட்கப்படும் கல்வித் தகுதி, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை upload செய்து விண்ணப்பத்தை Submit செய்ய வேண்டும்.
விண்ணப்பித்த பிறகு Application/Registration Number மற்றும் PDF/Print copy-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
முக்கிய தேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2026
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்துக் கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு:
https://incometaxmpcg.gov.in/canteen-recruitment-2026/assets/Notification.pdf




