“2029-ல் ராகுல் காந்தி பிரதமர்” – அமைச்சர் ராஜேஷ் குமார் நம்பிக்கை!

 

 

தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என கூறிய அமைச்சர் ராஜேஷ் குமார், 2029-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மக்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், கட்சியை வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

 

வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கைச்சின்னம் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

Read Previous

வுஷூவில் பதக்கம் முதல் மருத்துவ கனவு வரை: அசத்தும் இரட்டையர்கள்!

Read Next

சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular