சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்களான நிகில் ஸ்ரீராம் மற்றும் நிக்ஷிதா, சர்வதேச வுஷூ போட்டிகளில் பதக்கங்களை வென்று, விளையாட்டுப் பிரிவின் கீழ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சிறு வயது முதல் ஒரே வகுப்பறையிலும், ஒரே பாடப்பிரிவிலும் பயின்று வந்த இருவரும் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளனர். சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்று சாதித்துள்ள நிலையில், தற்போது மருத்துவத் துறையில் தங்களது கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவத் துறையில் பணியாற்றி வருவதால், தங்களுக்கும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாக இரட்டையர்கள் தெரிவித்துள்ளனர். விளையாட்டிலும் கல்வியிலும் சாதித்து வரும் இவர்களின் முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.




