குழந்தைகளுக்கு நறுக்கி கொடுத்து விடும் பழங்கள் நிறம் மாறுகிறதா..!! இதை செய்து பாருங்கள் போதும்..!!

நமக்கு பழங்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். அதில் இருக்கும் சத்துக்காகவும் சரி சுவைக்காகவும் சரி தினமும் ஒரு முறையாவது சாப்பிட்டு விடுவோம். ஏனெனில் இதில் பல ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கின்றன.

இந்த பழங்களை நமது குழந்தைகளுக்கு தினமும் நறுக்கி பள்ளிக்கு கொடுத்து விடுவோம். ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த பழங்களின் நிறம் மாறிவிடும். அதனால் அந்த குழந்தைகள் பழங்களை சாப்பிடாமல் அப்படியே கொண்டு வந்து அதை கீழே கொட்ட தான் செய்வார்கள். இப்படி நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் இருக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் காண்போம்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு எடுத்து பழங்களை நறுக்கிய பின்பு அதில் தடவலாம். இப்படி செய்வதன் மூலம் அதில் நிறம் மாறாமல் இருக்கும்.

உப்பு: இந்த பழங்கள் நிறம் மாற ஆக்ஸிடேஷன் தான் காரணம். அது நடக்காமல் இருக்க பிங்க் உப்பை தண்ணீரில் கலந்து அதில் தெளித்து விடலாம்.

தண்ணீர் அல்லது நெய்: ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் மற்றும் சிறு தளி நெய் ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் பழங்களை அந்த தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் சிறு நிமிடங்களுக்கு அதை நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

Read Previous

வாகனம் ஓட்டுவதால் வரும் முதுகு வலிக்கு தீர்வு..!!

Read Next

நெஞ்சு சளி குறைக்கும் வீட்டு வைத்தியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular