நெஞ்சு சளி குறைக்கும் வீட்டு வைத்தியம்..!!

 

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இயற்கையான முறையில் நோய்களை சரி செய்தனர். ஆனால் இந்த காலகட்டத்திலோ சாதாரண தலைவலிக்கு கூட உடனே மருத்துவரை அணுகுகிறோம். இந்நிலையில் நெஞ்சு சளி ஜலதோசம் தொண்டை கட்டு போன்ற பிரச்சினைகளுக்கு இயற்கையான முறையில் எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

நெஞ்சு சளி பிரச்சனையை இயற்கையான முறையில் சரி செய்ய தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். அதுமட்டுமின்றி வாள்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேலைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பி சாப்பிட கபம் நீங்கும்.

மூக்கடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்ட காய்ச்சி பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வர மூக்கடைப்பு பிரச்சினை விரைவில் நீங்கும்.

தொண்டை கரகரப்பு சரியாக சுக்கு பால் மிளகு திப்பிலி ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு சரியாகும்.

Read Previous

குழந்தைகளுக்கு நறுக்கி கொடுத்து விடும் பழங்கள் நிறம் மாறுகிறதா..!! இதை செய்து பாருங்கள் போதும்..!!

Read Next

உலகையே அச்சுறுத்தும் உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular