ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவன் பிரின்ஸ் சோனி, புதன்கிழமை காலை உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மாணவன் மயங்கி விழுந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெற்றோர் மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




