சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை!

 

திருவண்ணாமலை மாவட்டம் தேவரெட்டியார்குப்பத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமணி (45), கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வீரமணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

வீரமணிக்கு சாகும்வரை சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read Previous

விஜய் குறித்து சர்ச்சைப் பேச்சு: நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Read Next

புழல் ஏரியில் மலக்கழிவு மாசுபாடு: வேல்முருகன் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular