LPG மானியம் பெற இன்று கடைசி நாள்? வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

 

 

எல்பிஜி சமையல் எரிவாயு மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC நடைமுறையை முடிக்க இன்று (ஆக.16) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தியில், தங்களது செயலி அல்லது அருகிலுள்ள எரிவாயு விநியோகஸ்தர் மூலம் e-KYC-ஐ விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

e-KYC நடைமுறையை முடிக்காதவர்கள் தொடர்ந்து எல்பிஜி மானியத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான மானிய விலைக்கு பதிலாக சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

எனவே, மானியம் பெறும் LPG வாடிக்கையாளர்கள் தங்களது e-KYC நிலையை உடனடியாக சரிபார்த்து, தேவைப்பட்டால் நடைமுறையை முடித்துக் கொள்வது நல்லது.

Read Previous

5-ம் தலைமுறை போர் விமானங்களுக்கு என்ஜின்: ரிலையன்ஸ்–ரோல்ஸ் ராய்ஸ் புதிய கூட்டணி!

Read Next

“குழந்தைகள் முதல் தமிழக மக்கள் வரை விஜய் மனதில் இடம்பிடித்துள்ளார்!” – சி.விஜயபாஸ்கர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular