அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் பலி!

 

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சலாடோ பகுதியில் பறந்து கொண்டிருந்த ராணுவத்தின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்ததும் ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

லடாக்கில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.5!

Read Next

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? ஈரான் அதிரடி நிபந்தனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular