லடாக்கில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.5!

 

 

லடாக்கின் லே பகுதியில் இன்று (ஆக.13) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதன் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பில் பலமாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனினும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான பொருட்சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து, அப்பகுதியில் நிலைமை குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Read Previous

முதல்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்!

Read Next

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular