ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? ஈரான் அதிரடி நிபந்தனை!

 

 

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்கா போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நீரிணை தொடர்பான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையிலான இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்துள்ள நிலையில், ஹார்முஸ் விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் சூழல் நீடித்தால், சர்வதேச எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Read Previous

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் பலி!

Read Next

டிரம்பின் புதிய ‘TRUTH API’ சேவை: மாதம் ரூ.1 கோடி கட்டணமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular