அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்! தமிழக அரசு புதிய அரசாணை!

 

 

தமிழகத்தில் நடைபெறும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டதாக கூறப்படும் இந்த அரசாணையின்படி, கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.

 

தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டிற்கு உரிய மரியாதை செலுத்தும் வகையிலும், நிகழ்ச்சிகளில் தமிழின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இனி அரசு சார்ந்த முக்கிய நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது கட்டாய நடைமுறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

கோவையில் தொடரும் கொலைகள்! வீட்டில் பெண் சடலமாக மீட்பு – 10 நாட்களில் 4வது மரணம்?

Read Next

காவிரி நீர் விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் – டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular