காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்ப்பற்றாக்குறையால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் டி.ஆர்.பாலு தனது நோட்டீஸில் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது.




