“பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு!” – தங்கம் தென்னரசு!

 

 

சிவகாசியில் இன்று (ஆக.16) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

 

அப்போது, “பட்டாசு தொழிலாளர்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்” என அவர் தெரிவித்தார்.

 

மேலும், சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வரும் சிறு, குறு வியாபாரிகளின் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் சென்று, ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தவெக அரசு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

 

“தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Read Previous

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்!

Read Next

“நின்றால் கைது.. நடந்தால் கைது!” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular