அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Oplus_16908288

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் மிதித்த கல்லூரி மாணவர் வரபிரசாத் (17), மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

அறுந்த மின்கம்பி தொடர்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததே விபத்துக்கு காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

இதையடுத்து, மின்சார வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து, வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை மாணவரின் உறவினர்கள் முற்றுகையிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மின்கம்பி அறுந்து கிடந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

“திமுகவுடனான உறவில் இடைவெளி இருந்தாலும் முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்படுகிறோம்!” – ஜெய்ராம் ரமேஷ்!

Read Next

திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு: 2 சிறுவர்கள் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular