“திமுகவுடனான உறவில் இடைவெளி இருந்தாலும் முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்படுகிறோம்!” – ஜெய்ராம் ரமேஷ்!

 

 

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஆளுங்கட்சியான தவெக கூட்டணியில் இணைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டணி முடிவுக்கு வந்தது.

 

இந்நிலையில், திமுகவுடனான தேர்தல் உறவில் தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் திமுக தங்களுடன் இணைந்தே செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தேர்தல் கூட்டணி வேறு, பொதுவான முக்கிய பிரச்னைகளில் இணைந்து செயல்படுவது வேறு என்றும், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Read Previous

நீலகிரியில் சோகம்: பெண் தற்கொலை; தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நபர் விஷம் குடித்தார்!

Read Next

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular