தூத்துக்குடி புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே திருநங்கை ஒருவரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துச் சென்றதாக 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (47), தனியார் உணவகம் அருகே நின்றிருந்தபோது பைக்கில் வந்த சிறுவர்கள் அவரிடம் செல்போனை கேட்டதாக கூறப்படுகிறது. அவர் செல்போனை தர மறுத்ததால், இருவரும் கத்தியால் தாக்கியதாக தெரிகிறது.
இதில் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரது செல்போனை பறித்துக்கொண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்த சித்ரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




