ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு கல்வி தடை! 24 லட்சம் பேர் பாதிப்பு!

 

 

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பெண் குழந்தைகளுக்கான இடைநிலைப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இதனால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

தலிபான்களின் இந்த நடவடிக்கையால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 24 லட்சம் பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

 

பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் இந்த முடிவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்திவைப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

Read Next

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular