லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள நபடிஹா மாவட்டத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




