நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டாலும் உண்மையான அன்புக்கும் நட்புக்கும் எல்லைகள் இல்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய தம்பதியினர் தங்களது குடியிருப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பத் தயாராகியுள்ளனர். அப்போது அவர்களுக்கு நெருக்கமான அமெரிக்கப் பெண் ஒருவர் வழியனுப்ப வந்த நிலையில், தம்பதியினரை கட்டியணைத்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
The sentinel X-ல் பகிர்ந்த வீடியோவில், அந்தப் பெண் தம்பதியினரை நீண்ட நேரம் கட்டியணைத்தபடி கண்ணீர் விட்டு அழும் காட்சி இடம்பெற்றுள்ளது. “நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன்” என அவர் கூறியபோது, தம்பதியினரும் அவரை அரவணைத்து ஆறுதல் கூறினர்.
தம்பதியினர் அமெரிக்காவை விட்டு புறப்படும் முன் நடைபெற்ற இந்தப் பிரியாவிடை தருணத்தை நண்பர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் பிரியாவிடை அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
An emotional farewell unfolded as an American grandmother broke down while her Indian neighbours prepared to return to India after years of living next door. Having developed a close bond and become like family over the years, the neighbours shared an emotional goodbye before… pic.twitter.com/l54aOSUTsA
— The Sentinel (@Sentinel_Assam) August 14, 2026




