சமூக வலைத்தளங்கள் மற்றும் உடனடி செய்திப் பரிமாற்ற செயலிகளில் பரபரப்பான தலைப்புகளுடன் பல்வேறு வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக தனிநபர்களை களங்கப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன.
அந்த வகையில், ‘ஆசிரியர்-மாணவர் லீக்’, ‘5:40 நிமிட MMS ஊழல்’, ‘30 நிமிடம் 04 வினாடிகள் கொண்ட வீடியோ’ உள்ளிட்ட தலைப்புகளுடன் ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பள்ளியில் நடந்த சம்பவம் என கூறப்பட்டதால், பலரும் அதனை உண்மையான வீடியோ என நம்பினர்.
ஆனால், தொழில்நுட்ப ஆய்வுகளின்படி இந்த வீடியோ உண்மையான பள்ளி சம்பவம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. வீடியோவில் இடம்பெற்றுள்ள வாட்டர்மார்க் மற்றும் அதனுடன் தொடர்புடைய இணையதள பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், அது வேறு இணைய தளத்தில் இருந்து பரப்பப்பட்ட உள்ளடக்கம் என்பது தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக பார்வைகள் மற்றும் கிளிக்குகளைப் பெறுவதற்காக பழைய அல்லது வேறு தளங்களில் உள்ள வீடியோக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தலைப்புகளை வைத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற வைரல் வீடியோக்களை உண்மை என நம்புவதற்கு முன் அதன் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்ப்பது அவசியம்.




