உத்தரப் பிரதேசம் சித்தார்த்தநகர் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க 13 வயது மகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு தாயே உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
மும்பையில் பணியாற்றி வரும் ஜெயராமின் மனைவியும் 13 வயது மகளும் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த ஜூன் 26-ம் தேதி சிறுமியை கடைக்கு அனுப்பிவிட்டு, தாய் தனது கள்ளக்காதலனான தஸவ்வூரை வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக வீடு திரும்பிய சிறுமி இருவரையும் ஆட்சேபகரமான நிலையில் பார்த்துள்ளார்.
இந்த விஷயத்தை தந்தையிடம் தெரிவிப்பதாக சிறுமி கூறியதால், தங்களது உறவு வெளியில் தெரிந்துவிடும் என அஞ்சிய தாய், கள்ளக்காதலனை தூண்டிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சிறுமி தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதன்பின் தாயும் தஸவ்வூரும் வீட்டை விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
சிறுமி நடந்த சம்பவத்தை தந்தையிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மிஷ்ரோலியா போலீசார் BNS மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் தாய் மற்றும் தஸவ்வூர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




