சர்வதேச தரவு நிறுவனமான IDC வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 11.1% சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, அந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 3.32 கோடி யூனிட்டுகளாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் நிலவி வரும் மெமரி சிப் தட்டுப்பாடு மற்றும் ஸ்மார்ட்போன் உதிரிபாகங்களின் விலை உயர்வு ஆகியவை சந்தை சரிவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. உற்பத்திச் செலவு அதிகரித்ததன் தாக்கமாக பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியதும் விற்பனையை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தை சரிவின் தாக்கம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களிலும் எதிரொலித்துள்ளது. Vivo, Realme, Xiaomi உள்ளிட்ட முன்னணி பிராண்டுகள் இரட்டை இலக்க அளவில் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக IDC அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.




