டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) தொடர்பான திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
சிறுபான்மை அமைப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் மசோதாவில் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து FCRA திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிலளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய உரிய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் அவசியம் என தெரிவித்தார்.




