இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 1 கோடி பேருக்கு AI பயிற்சி: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

 

 

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் இளைஞர்களை எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

அடுத்த ஓராண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பயிற்சி வழங்கப்படும் என அவர் அறிவித்தார். மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

 

தொழில்நுட்பத் துறையில் நாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், 7 முதல் 8 செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும், 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும், அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் 5 புதிய அணு உலைகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Read Previous

80-வது சுதந்திர தினம்: வலிமையான பாரதத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்! அண்ணாமலை வாழ்த்து!

Read Next

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு சாகும்வரை சிறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular