சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு சாகும்வரை சிறை!

 

 

திருவண்ணாமலை மாவட்டம் தேவரெட்டியார்குப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வீரமணி (45), கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 

இந்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, நேற்று தீர்ப்பு வழங்கினார்.

 

இதில் குற்றவாளி வீரமணிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read Previous

இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 1 கோடி பேருக்கு AI பயிற்சி: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

Read Next

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறப்பு நிதி உயர்வு! முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular