80-வது சுதந்திர தினம்: வலிமையான பாரதத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்! அண்ணாமலை வாழ்த்து!

 

 

நாடு முழுவதும் இன்று (ஆக.15) 80-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரும் தலைவருமான அண்ணாமலை நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

இந்த நன்னாளில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அவர்களின் தியாகங்களை போற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதுடன், வளர்ச்சியடைந்த வலிமையான பாரதத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பாரதத்தின் புகழும் பெருமையும் உலகம் முழுவதும் தொடர்ந்து உயர வேண்டும் எனவும் அவர் தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read Previous

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய மகன்! நெகிழ்ச்சியில் தாய் ஷோபா சந்திரசேகர்!

Read Next

இளைஞர்களுக்கு குட் நியூஸ்! 1 கோடி பேருக்கு AI பயிற்சி: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular