ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடும் முதல்வர் விஜய்!

 

 

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இணைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டியில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று விளையாடுவார் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

 

மேலும், தவெக அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

“தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றுவதே இலக்கு” என தெரிவித்த அமைச்சர், மாநிலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Read Previous

சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் – அண்ணாமலை!

Read Next

2029 தேர்தலில் 34 கோடி Gen Z வாக்காளர்கள்? – அண்ணாமலை தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular