2029 நாடாளுமன்றத் தேர்தலில் 34 கோடி Gen Z வாக்காளர்களும், 1980 முதல் 1996 வரை பிறந்த 30 கோடி மில்லினியல் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் அணுகுமுறைகளை ஏற்க விரும்பாத இளம் தலைமுறையினர், அரசியலில் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்கால தேர்தல்களில் அவர்களின் எதிர்பார்ப்புகளும் அரசியல் முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.




