கனிமங்கள் திருத்த மசோதா: தமிழக வருவாய் பாதிக்கப்படும் என துரை வைகோ எச்சரிக்கை!

 

கனிமங்கள் திருத்த மசோதா அமலுக்கு வந்தால் தமிழகத்தின் முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்று பாதிக்கப்படும் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் தமிழக அரசுக்கு ரூ.4,395.68 கோடி வருவாய் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.2,265 கோடி கனிம வளம் கொண்ட நிலத்திற்கான வரி மூலம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா அமலுக்கு வந்தால் தமிழகத்தின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும் என துரை வைகோ எச்சரித்துள்ளார். இதனால் மாநிலத்தின் நிதி உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நிதி உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

காரசாரமான பெப்பர் சிக்கன் வறுவல் செய்யும் முறை..!!

Read Next

விஜய் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular