விஜய் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

 

முதலமைச்சர் விஜய் குறித்து இழிவாக பேசியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் நாகரிகத்தை மீறி தரம் தாழ்ந்து பேசுவது நயினார் நாகேந்திரனுக்கு இது முதல் முறையல்ல என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுபோன்ற பேச்சுகள் அவருக்கு தொடர்ந்து வாடிக்கையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சர் விஜயிடமும் நயினார் நாகேந்திரன் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

கனிமங்கள் திருத்த மசோதா: தமிழக வருவாய் பாதிக்கப்படும் என துரை வைகோ எச்சரிக்கை!

Read Next

ஜோ ரூட்டின் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular