கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான வழக்கில், ஜூலை 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பணி நியமனங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இதுவரை 27 பேர் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான அரசின் நிலைப்பாட்டை விளக்கும் பதிலை ஜூலை 24-க்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Previous

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

Read Next

பெரம்பூர் தொகுதி வெற்றி வழக்கு: முதல்வர் ஜோசப் விஜய்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular