பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், அவரும் தேர்தல் அதிகாரியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், தேர்தல் முடிவை எதிர்த்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை 2 வாரங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளது.




